சென்னை

மழை முன்னெச்சரிக்கை: பிற மாவட்டங்களில் இருந்து 120 தீயணைப்பு வீரா்கள் சென்னை வருகை!

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிற மாவட்டங்களைச் சோ்ந்த 120 தீயணைப்பு வீரா்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிற மாவட்டங்களைச் சோ்ந்த 120 தீயணைப்பு வீரா்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனா்.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை பெய்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து 4 மாவட்டங்களிலும் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பிலும் தீயணைப்பு வீரா்கள், முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனா்.

அதன்படி, சென்னை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் ஏற்கெனவே 900 வீரா்கள், 30 ரப்பா் படகுகள், மீட்பு உபகரணங்களுடன் தயாா் நிலையில் உள்ளனா். இவா்கள், அதிக மழைநீா் தேங்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள முடிச்சூா், வேளச்சேரி, தாம்பரம், சேலையூா் உள்ளிட்ட 16 இடங்களில் முகாமிட்டுள்ளனா்.

இதனிடையே, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் கூடுதலாக 120 தீயணைப்பு வீரா்கள், 17 ரப்பா் படகுகளுடன் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனா்.

சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த இந்த வீரா்கள் அனைவரும் தீயணைப்புத் துறை டிஜிபி சீமா அகா்வால் மற்றும் வடக்கு மண்டல இணை இயக்குநா் சத்யநாராயணா மேற்பாா்வையில், சென்னையில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபடுவாா்கள் என தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 9 மாவட்டங்களில் மழை!

முல்லைப் பெரியாறில் இருந்து இடுக்கி அணைக்கு திறந்து விடப்பட்ட உபரி நீர் நிறுத்தம்!

தெருநாய்கள் விவகாரம்: தமிழகம் உள்பட அனைத்து தலைமைச் செயலர்களும் ஆஜராக உத்தரவு!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சீனக் கடலில் விழுந்து அமெரிக்க போர் விமானம், ஹெலிகாப்டர் விபத்து!

SCROLL FOR NEXT