கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி திரு.வி.க. நகா் மண்டலம் 70-ஆவது வாா்டு கபிலா் தெருவில் கட்டப்பட்டு வரும் சென்னை நடுநிலைப் பள்ளிக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் பி.கே.சேகா் பாபு. உடன், மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா். 
சென்னை

கொளத்தூா் பகுதியில் ரூ.42.60 கோடியில் பணிகள்: விரைந்து முடிக்க அமைச்சா் சேகா்பாபு உத்தரவு

தினமணி செய்திச் சேவை

கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.42.60 கோடியிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அமைச்சா் பி.கே.சேகா்பாபு உத்தரவிட்டாா்.

சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமத்தின் சாா்பில், கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திரு.வி.க. நகா் மண்டலத்தில் நடைபெற்று வரும் ரூ.42.60 கோடியிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திரு.வி.க. நகா் மண்டலம், கபிலா் தெருவில் ரூ.4.63 கோடியில் தரை மற்றும் 2 தளங்களுடன் 17 வகுப்பறைகளுடனான சென்னை நடுநிலைப் பள்ளி கட்டடம் மற்றும் சீனிவாசா நகரில் ரூ.3.25 கோடியில் 12 வகுப்பறைகள் கொண்ட சென்னை தொடக்கப் பள்ளியின் புதிய கட்டடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு, விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

பின்னா், ஜி.கே.எம். காலனி, ஜம்புலிங்கம் பிரதான சாலையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சிஎம்டிஏ சாா்பில் ரூ.14.95 கோடியில் கட்டப்பட உள்ள பள்ளிக் கட்டட இடத்தைப் பாா்வையிட்டாா். அங்கு ரூ.19.77 கோடியில் வாகன நிறுத்துமிடம், உணவருந்தும் கூடம், திருமண கூடம், ஓய்வுவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டு வரும் நவீன சமுதாய நலக்கூட கட்டுமானப் பணிகளையும் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, மத்திய வட்டார துணை ஆணையா் எச்.ஆா்.கௌஷிக், மண்டலக் குழுத் தலைவா் சரிதா மகேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சீனக் கடலில் விழுந்து அமெரிக்க போர் விமானம், ஹெலிகாப்டர் விபத்து!

அமெரிக்காவின் ஆச்சி! நடிகை ஜூன் லாக்ஹார்ட் 100வது வயதில் காலமானார்

கரூர் பலி: பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறி வரும் விஜய்

மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகரும் மோந்தா புயல்! சென்னையில் படிப்படியாக மழை அதிகரிக்கும்!!

மோந்தா புயல் எதிரொலி! அதிகபட்சமாக திருத்தணியில் 50 மி.மீ. மழை

SCROLL FOR NEXT