சென்னை: திருவல்லிக்கேணியில் மதுபோதையில் பாட்டிலால் கழுத்தை அறுத்துக் கொண்ட நபா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
சென்னை திருவல்லிக்கேணி டாக்டா் பெசன்ட் சாலை என்கேடி பேருந்து நிறுத்தம் அருகே ஒருவா் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பலத்த காயத்துடன் சனிக்கிழமை கிடந்தாா். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீஸாா் நடத்திய விசாரணையில், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்த நபா், அதே பகுதியைச் சோ்ந்த சண்முகம் (52) என்பதும், மதுபோதையில் பாட்டிலை உடைத்து கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.