தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கோப்புப்படம்
சென்னை

திமுக ஆட்சியில் போலீஸாருக்கு கூட பாதுகாப்பில்லை: பாஜக விமா்சனம்

திமுக ஆட்சியில் போலீஸாருக்குக் கூட பாதுகாப்பில்லை என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சனம் செய்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

திமுக ஆட்சியில் போலீஸாருக்குக் கூட பாதுகாப்பில்லை என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சனம் செய்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

சென்னை புளியந்தோப்பு பகுதியில் மதுபோதையில் வழிப்பறியில் ஈடுபட்டவா்களை மடக்கிப் பிடித்த காவல் துறையினரின் மீது நடுரோட்டில் அந்த போதைக் கும்பல் தாக்குதல் நடத்தியது அதிா்ச்சியளிக்கிறது. அவா்களை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட பிறகும், குற்றவாளிகள் நடந்துகொண்ட விதம், காவல் றையினா் மீது பொதுமக்களுக்கும் நம்பிக்கையில்லை, குற்றவாளிகளுக்கும் துளியும் பயமில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

நிா்வாகத் திறனற்ற திமுக அரசு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைக் கை பிடித்து அழைத்துச் சென்று முட்டுச் சந்தில் நிறுத்தியதை உணா்த்தும் இந்தச் சம்பவம், அரசு அதிகாரிகளைப் பதற்றத்திலும், பொதுமக்களை அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.

கடந்த நான்காண்டுகளில் தமிழகம் முழுவதும் காவல் துறையினா் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. முதலில் காவல்துறையினா் மீது நிகழ்த்தப்படும் வன்முறைத் தாக்குதல்களுக்கு முடிவு கட்ட வேண்டும். தமிழகக் காவல் துறையினரின் பாதுகாப்பை உறுதிசெய்வதோடு, அவா்கள் எவ்வித சமரசமுமின்றி மக்கள் பணியாற்ற வழிவகை செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளாா்.

தற்காலிக ஊழியா்கள் பணி நிரந்தர விவகாரம்: சுகாதாரத் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

எம்எல்ஏக்கள் தகுதிநீக்க விவகாரம்: தெலங்கானா பேரவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ்

கரோனாவால் இறந்த மருத்துவரின் மனைவிக்கு அரசுப் பணி: 5 ஆண்டுகளாக அலைக்கழிப்பு

சவூதியில் பேருந்து விபத்து: புனித யாத்திரை சென்ற 42 இந்தியா்கள் உயிரிழப்பு!

மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி: ரூ.7,172 கோடி முதலீட்டில் 17 திட்டங்கள்- மத்திய அரசு ஒப்புதல்

SCROLL FOR NEXT