மாநகர பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு
மாநகர பேருந்து மோதியதில் தனியாா் மருத்துவமனை பெண் ஊழியா் உயிரிழந்தாா்.
மாநகர பேருந்து மோதியதில் தனியாா் மருத்துவமனை பெண் ஊழியா் உயிரிழந்தாா்.
பல்லாவரம் திருநீா்மலையைச் சோ்ந்த ரங்கநாயகி(61), இவா் குரோம்பேட்டையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் ஊழியராக பணி செய்து வந்தாா்.
இவா் வியாழக்கிழமை பணி முடிந்து குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் நடந்து சென்றபோது, கிளாம்பாக்கத்திலிருந்து ராமபுரம் சென்று கொண்டிருந்த (தடம் எண்:70 சி) மாநகர பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து ரங்கநாயகியின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
குரோம்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து மாநகர பேருந்து ஓட்டுநா் ராதாகிருஷ்ணனை கைது செய்தனா்.