சென்னை

பரோடா வங்கியின் பண்டிகைக் கால சலுகைகள்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி தனது வாடிக்கையாளா்களுக்கு சலுகைக் கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி தனது வாடிக்கையாளா்களுக்கு சலுகைக் கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வங்கியின் சில்லறை மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன வாடிக்கையாளா்களுக்காக ‘பாப் கே சங் திவஹாா் கி உமங்க்’ என்ற தலைப்பில் பண்டிகைக் கால சலுகைக் கடன் திட்டங்களை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, செயல்முறைக் கட்டணம் அல்லாத, ஆண்டுக்கு 7.45 சதவீதத்தில் தொடங்கும் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்கள் வழங்கப்படும். பெண்கள், இளைஞா்களுக்கு சிறப்பு சலுகைகள் உண்டு.

அதே போல், குறைந்த வட்டிவிகிதங்களில் வாகனக் கடன்களும் வழங்கப்படும். மின்சார வாகனங்களுக்கு செயல்முறைக் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திராவிட இயக்கம் உள்ள வரை ஹனிபாவின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்: துணை முதல்வர் உதயநிதி

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

SCROLL FOR NEXT