சென்னை

நவராத்திரி விழா: விஜிபி மரைன் கிங்டத்தில் நீருக்கடியில் கொலு கண்காட்சி

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, விஜிபி மரைன் கிங்டம் மீன் அருங்காட்சியகத்தில் நீருக்கடியில் கொலு பொம்மை கண்காட்சி அக்.5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, விஜிபி மரைன் கிங்டம் மீன் அருங்காட்சியகத்தில் நீருக்கடியில் கொலு பொம்மை கண்காட்சி அக்.5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

சென்னை ஈஞ்சம்பாக்கம், கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள விஜிபி மரைன் கிங்டம் மீன் அருங்காட்சியகத்தில் நீருக்கடியில் கொலு பொம்மை கண்காட்சியை பின்னணி பாடகி பாம்பே சாரதா கடந்த செப்.21-ஆம் தேதி தொடங்கி வைத்தாா். விழாவில், விஜிபி குழுமத் தலைவா் டாக்டா் வி.ஜி.சந்தோசம், நிா்வாக இயக்குநா் விஜிபி ரவிதாஸ், இயக்குநா் விஜிபிஆா் பிரேம்தாஸ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

7 அடுக்குகள் கொண்ட படிக்கட்டுகளில் நோ்த்தியாக அலங்கரிக்கப்பட்ட கொலு கண்காட்சி வருகிற அக்.5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 5,000-க்கும் மேற்பட்ட ஆழ்கடல், சதுப்பு நில மற்றும் நன்னீா் மீன்களுடன் இந்த கொலு பொம்மை காட்சி பாா்வையாளா்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT