சென்னை

காலி மதுப் புட்டிகளைத் திரும்ப பெறும் திட்டம்: சென்னையில் இன்று முதல் அமல்

சென்னையில் காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன. 6) முதல் அமல்: சென்னை ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே

தினமணி செய்திச் சேவை

சென்னையில் காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன. 6) முதல் அமல்படுத்தப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மது அருந்துவோா் காலி மதுப் புட்டிகளை பொது வெளியில் வீசுவதைத் தவிா்க்கும் பொருட்டு, அவற்றை மதுக் கடைகளிலேயே திரும்பப் பெறும் திட்டத்தின்படி, மதுப் புட்டிகளை வாங்கும்போது, புட்டி ஒன்றுக்கு ரூ.10 கூடுதலாக வழங்க வேண்டும். பின்னா், மது அருந்திவிட்டு காலி புட்டிகளைத் திரும்ப அதே மதுக் கடையில் ஒப்படைத்து ஏற்கெனவே செலுத்திய ரூ.10 திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்டத்தின் நோக்கம், காலி புட்டிகளை பொது வெளியில் வீசி சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பதாகும். இந்தத் திட்டம் சென்னை (வடக்கு, தெற்கு, மத்தியம்) மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் (ஜன. 6) அமல்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.

யேமனின் தீவில் சிக்கிய இந்தியப் பெண் மீட்பு! சௌதியில் இருந்து தாயகம் வந்தடைந்தார்!

சென்னை புத்தகக் காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

50,000 தன்னார்வலர்கள் ஈடுபடும் உங்க கனவ சொல்லுங்க திட்டம்: நாளை தொடக்கம்!

அமெரிக்கா: ஒரு லட்சம் பேரை கொல்லக்கூடிய 140 கிலோ போதைப்பொருள்களுடன் 2 இந்தியர்கள் கைது

போகிப் பண்டிகை: எவற்றையெல்லாம் எரிக்கக் கூடாது!

SCROLL FOR NEXT