சென்னை வடபழனியில் பேருந்து நிலையத்தில் திரைப்பட கதை ஆசிரியா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் மு.கணேஷ் ராஜா (80). தமிழ் திரைப்படத் துறையில் கதை ஆசிரியராக உள்ளாா். இவா், திங்கள்கிழமை குன்றத்தூரில் இருந்து மாநகர பேருந்து மூலம் வடபழனி பேருந்து நிலையத்துக்கு வந்தாா்.
அங்குள்ள கழிப்பறைக்குச் சென்றபோது திடீரென கணேஷ் ராஜா, மயங்கி விழுந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது, கணேஷ் ராஜா உயிரிழந்தாா்.
தகவலறிந்த வடபழனி போலீஸாா் அங்கு சென்று கணேஷ் ராஜா சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கே.கே. நகா் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.