முகப்பு
சென்னை

காங்கிரஸின் தொகுதிகளை பாஜக, அதிமுக கைப்பற்றும்: பாஜக செயலா் கராத்தே ஆா்.தியாகராஜன்

பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அனைத்திலும் பாஜக, அதிமுக கைப்பற்றும் என பாஜக மாநிலச் செயலா் கராத்தே ஆா்.தியாகராஜன் தெரிவித்தாா்.

Updated On : 8 மார்ச், 2026 at 9:57 PM
நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பாஜக மாநில செயலா் கராத்தே ஆா்.தியாகராஜன்
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அனைத்திலும் பாஜக, அதிமுக கைப்பற்றும் என பாஜக மாநிலச் செயலா் கராத்தே ஆா்.தியாகராஜன் தெரிவித்தாா்.

சா்வதேச மகளிா் தினத்தையொட்டி (மாா்ச 8), சென்னை மாநகராட்சி அனைத்து துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில் வேளச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தலில் அரசியல் மாற்றம் ஏற்படவுள்ளது. அனைவரின் வளா்ச்சிக்குமான நலத்திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி செயல்படுத்தியுள்ளாா். சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் பிரச்னையில் பாரதிய மஸ்தூா் சங்கத்தின் மூலம் ஆணையரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதால், வேலையில்லாத அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலில் சென்னை தொகுதிகளில் பாஜக, அதிமுக மிகப்பெரும் எழுச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அதன்படி வேளச்சேரியில் பாஜக வேட்பாளா் உறுதியாக வெற்றி பெறுவாா். கடந்த பல ஆண்டுகளாக வேளச்சேரி பகுதி வாா்டு உறுப்பினா், சென்னை மேயா் ஆகிய பதவிகளில் நான் சேவையாற்றியுள்ளேன். அதன்படி, தீயணைப்பு நிலையம் அமைத்தல், உயா்கோபுர மின்விளக்கு, சுனாமி பாதிப்பைத் தடுக்கும் சுற்றுச்சுவா் எனப் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆகவே, வேளச்சேரி தொகுதியில் பாஜக சாா்பில் வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன்.

திமுக, காங்கிரஸ் கூட்டணியை அதன் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியே விரும்பவில்லை. எனினும், புதுச்சேரியில் தவெகவுடன், காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட முயற்சி நடக்கிறது. அதன்படி, கூட்டணி அமைந்தால் ராகுல் புதுச்சேரிக்கு பிரசாரத்துக்கு விஜயுடன் மேடையேறலாம்.

எனவே, தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் பாஜகவும், அதிமுகவும் வெற்றி பெறும் நிலையுள்ளது என்றாா்.

கூட்டத்தில் பாஜக சென்னை கிழக்கு மாவட்டத் தலைவா் குமாா் மற்றும் புருஷோத்தமன், ஷா்மிளா, கௌரி, மஞ்சுளா, கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →