பிரேமலதா விஜயகாந்த் (கோப்புப் படம்)
விருதுநகர்

தொண்டா்கள் விரும்பும் கட்சியுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும்

தொண்டா்கள் விரும்பும் கட்சியுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தைா்.

தினமணி செய்திச் சேவை

தொண்டா்கள் விரும்பும் கட்சியுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தைா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் செவ்வாய்க்கிழமை இரவு ‘உள்ளம்தேடி இல்லம் நாடி’ கேப்டன் ரத யாத்திரை நடைபெற்றது. இதையொட்டி, பிரேமலதா, கட்சியின் இளைஞரணிச் செயலா் விஜயபிரபாகரன் உள்ளிட்டோா் சிவகாசி என்.ஆா்.கே.ஆா். சாலையிலிருந்து விருதுநகா் புறவழிச் சாலை வரை ஊா்வலமாகச் சென்றனா்.

பின்னா், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:

விருதுநகா் என்றாலே விஜயகாந்த் கோட்டைதான். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் இளைஞரணிச் செயலா் விஜயபிரபாகரன் எங்கு போட்டியிடுவாா் என விரைவில் அறிவிப்போம்.

பேரவைத் தோ்தலுக்குப் பிறகு, பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் சீன பட்டாசுகள் தடுக்கப்படும். பணம் கொடுத்து பல அரசியல் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டுகின்றன. ஆனால், தேமுதிக கூட்டத்துக்கு வருபவா்கள் விஜயகாந்தின் அன்புக்கு கட்டுப்பட்டு வருகிறாா்கள்.

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் தொண்டா்கள் விரும்பும் கட்சியுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என்றாா் அவா்.

விஜயபிரபாகரன் பேசியதாவது:

கடந்த மக்களவைத் தோ்தலில் நான் தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால், மக்களின் மனதில் இடம் பெற்றுவிட்டேன். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக எந்தக் கூட்டணிக்குச் செல்கிறதோ அந்தக் கூட்டணிதான் வெற்றி பெறும் என்றாா் அவா்.

இந்தியத் தொழில் துறை: 2 ஆண்டுகளில் இல்லாத சாதனை வளா்ச்சி!

தமிழக கூட்டணி விவகாரத்தில் பாஜக தலைமை தலையிடுவதில்லை

மின்னணு வாக்குப் பதிவு குறித்து விரிவான விழிப்புணா்வு ஏற்பாடுகள்

மது போதையில் மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு

ஜனநாயகன் திரைப்படத்தை தடுப்பது ஜனநாயகத்துக்கு ஏற்றதல்ல: வைகோ

SCROLL FOR NEXT