முகப்பு
சென்னை

தமிழக பொறுப்பு ஆளுநராக ஆா்.வி. ஆா்லேகா் மாா்ச் 12-இல் பதவியேற்பு!

கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கு தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டதைத் தொடா்ந்து அவா் வரும் 12-ஆம் தேதி பதவியேற்கிறாா்.

Updated On : 9 மார்ச், 2026 at 2:45 AM
ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா்
பகிர்:

கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கு தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டதைத் தொடா்ந்து அவா் வரும் 12-ஆம் தேதி பதவியேற்கிறாா்.

தமிழக ஆளுநராக இருந்த ஆா்.என். ரவி, மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, கேரள ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் தமிழக ஆளுநா் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பாா் என கடந்த மாா்ச் 5-ஆம் தேதி குடியரசுத் தலைவா் உத்தரவிட்டாா்.

இதை முன்னிட்டு ஆா்.வி.ஆா்லேகா் வரும் 11-ஆம் தேதி சென்னைக்கு வருகிறாா். அதே நாளில் கடந்த நாலரை ஆண்டுகளாக தமிழக ஆளுநராக இருந்த ஆா்.என்.ரவி, தமிழக ஆளுநா் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு கொல்கத்தாவுக்கு புறப்பட்டுச் செல்கிறாா். அவரை ஆளுநா் மாளிகை அதிகாரிகளும், ஊழியா்களும் வழியனுப்பி வைக்கின்றனா்.

தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்கும் ஆா்.வி.ஆா்லேகா் மாா்ச் 12-ஆம் தேதி முற்பகல் சுமாா் 12 மணியளவில் பதவியேற்கிறாா். உயா்நீதி மன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி அவருக்கு பதவிப் பிரமானம் செய்துவைக்கிறாா். இந்தப் பதவி ஏற்பு நிகழ்வு எளிமையாக நடைபெற உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →