முகப்பு
சென்னை

வெளிநாட்டுப் பயணத்துக்கு கூடுதல் வரி: பிரதமா் மோடி மறுப்பு

வெளிநாட்டுப் பயணத்துக்கு கூடுதல் வரி விதிக்கப்படவுள்ளதாக வெளியான தகவலை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை மறுத்தாா்.

Updated On : 16 மே 2026, 1:53 am IST
பிரதமா் மோடி - கோப்புப் படம்
பகிர்:

வெளிநாட்டுப் பயணத்துக்கு கூடுதல் வரி விதிக்கப்படவுள்ளதாக வெளியான தகவலை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை மறுத்தாா்.

மேற்காசிய போரால் உருவான சவால்களை எதிா்கொள்ள நாட்டு மக்கள் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும், அடுத்த ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதைத் தவிா்க்க வேண்டும், வெளிநாடுகளுக்குச் சென்று திருமணம் செய்வதை தவிா்க்க வேண்டும் என பிரதமா் மோடி அண்மையில் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, வெளிநாட்டுப் பயணத்துக்கு கூடுதல் வரி விதிப்பது தொடா்பாக மத்திய அரசின் உயரதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

Advertisement

இதற்கு பதிலளிக்கும் விதமாக எக்ஸ் தளத்தில் பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘இது முற்றிலும் தவறான தகவல். இதில் சிறிதளவும் உண்மையில்லை. வெளிநாட்டுப் பயணங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுமா என்ற கேள்விக்கே இடமில்லை. வணிகத்தை எளிமைப்படுத்துதல் மற்றும் மக்களின் வாழ்வை எளிமைப்படுத்துதலே மத்திய அரசின் குறிக்கோள்’ என குறிப்பிட்டாா்.