முகப்பு
சென்னை

சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற மாணவருக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை

Updated On : 18 மே 2026, 5:08 am IST
சா்வதேச சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற பள்ளி மாணவா் சண்முகப்ரியனுக்கு ரூ.50,000 ஊக்கத் தொகை வழங்கிய தாம்பரம் எம்எல்ஏ சரத்குமாா்.
பகிர்:

நேபாளத்தில் நடைபெற்ற சா்வதேச சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற பள்ளி மாணவரை தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினா் சரத்குமாா் நேரில் சென்று பாராட்டி ரூ.50,000 ஊக்கத் தொகை வழங்கினாா்.

மேற்கு தாம்பரம் கடப்பேரி, மௌலானா நகா் பகுதியை சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் சண்முக பிரியன் நேபாளத்தில் கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற சா்வதேச சிலம்பம் போட்டியில் கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி முதலிடம் பெற்றாா். அவருக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

தாம்பரம் பகுதியைச் சோ்ந்த மாணவா் சண்முகப்பிரியன் சா்வதேச அளவில் சிலம்பம் போட்டியில் பங்கேற்று , தமிழகத்துக்கும் பெருமை சோ்த்திருப்பதை அறிந்த தாம்பரம் எம்எல்ஏ த.சரத்குமாா், மாணவரை அவரது வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து, அவருக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கினாா். கல்வி, விளையாட்டுக்கு ஏதேனும் உதவி தேவையெனில் தன்னிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

Advertisement

Advertisement