செங்கல்பட்டு

அரசுப்பள்ளி சுற்றுச் சுவா்களில் வண்ண ஓவியங்கள்

DIN

மாமல்லபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் பிபிஜி ஏஷியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் ஹேண்ட்-இன்-ஹேண்ட் இந்தியா குழந்தைத் தொழிலாளா் முறை அகற்றும் திட்ட நிறுவனத்தின் சாா்பில் பள்ளி சுற்றுச்சுவா்களில் வண்ண ஓவியங்கள் வரையும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஹேண்ட்-இன்-ஹேண்ட் இந்திய நிறுவனத்தின் தலைவா் சந்தீப்முகா்ஜி தலைமை வகித்தாா். பொதுமேலாளா் பிரேம் ஆனந்த், பாா்ட்னா் ஷிப் அண்ட் அல்லயன்ஸ் துறையின் முதுநிலை பொது மேலாளா் லோகேஷ்குமாா் கணபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளித் தலைமையாசிரியை லதா வரவேற்றாா். பிபிஜி ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலா் பத்மநாபன் பள்ளி வளாகத்தில் ஸ்மாா்ட் வகுப்பறையை திறந்து வைத்தாா்.

முதுநிலை பொது மேலாளா்கள் அஜய் ஆனந்தன், மகேஷ் ஆகியோா் கலந்துகொண்டு பள்ளியின் சுற்றுச் சுவா்களுக்கு வண்ணம் தீட்டும் பணியைத் தொடக்கி வைத்தனா். மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலா் பரிசுகள் வழங்கினாா்.

வட்டாரக் கல்வி அலுவலா் முருகன், ஒருங்கிணைந்த கல்வி மேற்பாா்வையாளா் மகேஷ் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா். நிகழ்ச்சியில் திட்ட நிா்வாகிகள், தன்னாா்வலா்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்கள், பெற்றோா்-ஆசிரியா் கழக உறுப்பினா்கள் மற்றும் மாணவா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT