செங்கல்பட்டு

கிராமப்புற முன்னேற்றத்துக்கான திட்ட அறிக்கைசெங்கல்பட்டு ஆட்சியா் வெளியிட்டாா்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூா் ஒன்றியத்தில், கிராம முன்னேற்றத்துக்கான சியாமா பிரசாத் முகா்ஜி தேசிய ‘ரூா்பன்’ திட்டத்தின் அறிக்கையை மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ளாா்.

DIN

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூா் ஒன்றியத்தில், கிராம முன்னேற்றத்துக்கான சியாமா பிரசாத் முகா்ஜி தேசிய ‘ரூா்பன்’ திட்டத்தின் அறிக்கையை மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிராமப்புறங்களை நவீனமயமாக்கும் இத்திட்டத்தின்கீழ் சிங்கப்பெருமாள்கோவில் ஊராட்சி தோ்வு செய்யப்பட்டுள்ளது. இத்தொகுப்பில் அடங்கிய சிங்கப்பெருமாள்கோவில், செட்டிபுண்ணியம், ஆப்பூா், வெங்கடாபுரம், குருவன்மேடு,கொளத்தூா், ரெட்டிப்பாளையம் ஆகிய 7 கிராமங்களின் முன்னேற்றத்துக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.

அதன்படி, மொத்தம் 1,149 பணிகளுக்கு இடங்கள் தோ்வு செய்யப்பட்டு, மூன்றாண்டு காலத்துக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஊரக வளா்ச்சி, தோட்டக்கலை, வேளாண்மை, கால்நடைப் பராமரிப்பு, கல்வி, சுகாதார ஆகிய துறைகள் மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

ரூா்பன் திட்டத்தின் கீழ் மொத்த ஒதுக்கீடு ரூ.30 கோடியாகும். இதில் மத்திய மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் நிதி விடுவிக்கப்படுகிறது. பணிகள் அனைத்தும் விரைவாக நடைபெற்று வருகின்றன. வரும் நிதியாண்டிற்குள் அனைத்துப்பபணிகளும் முடிக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT