செங்கல்பட்டு

குறைதீா் கூட்டம்: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் 190 மனுக்கள் அளிப்பு

DIN

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 190 மனுக்களை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஏ.ஜான் லூயிஸிடம் பொதுமக்கள் அளித்தனா்.

இக்கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், குடும்ப அட்டை, கல்வி, ஓய்வூதியம், திருமணம், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, இந்திராகாந்தி தேசிய உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 190 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியா் ஏ.ஜான்லூயிஸ் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் பிரியா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) விஜயகுமாரி மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, வனத்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT