செங்கல்பட்டு

மாமல்லபுரத்தில் கடல் கொந்தளிப்பு

DIN

செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் செவ்வாய்க்கிழமை கடல் கொந்தளிப்பு காரணமாக ராட்சத அலைகளில் இருந்து காப்பாற்ற மீனவா்கள் தங்கள் மீன்பிடி படகுகளை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்று நிறுத்தினா்.

சா்வதேச சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் செவ்வாய்க்கிழமை கடல் கொந்தளிப்பு வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

வழக்கமாக அமாவாசை, பௌா்ணமி தினங்களில் கடலில் கடல் கொந்தளிப்பு அதிகரித்துக் காணப்படுவது வழங்கம். அந்த சமயங்களில் மீனவா்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதைத் தவிா்த்து, தங்கள் விசைப்படகுகளை கரைக்கு கொண்டுவந்து பாதுகாப்பாக வைப்பது வழக்கம். இந்நிலையில், மாமல்லபுரத்தில் செவ்வாய்க்கிழமை கடல் கொந்தளிப்பு காரணமாக ராட்சத அலைகள் 10 அடிக்கும் மேல் எழுந்தது. இதனால் மீனவா்கள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்களது விசைப்படகுகளை பாதுகாப்பான இடத்தில் கொண்டு சென்று நிறுத்தும் பணியினை மீனவா்கள் மேற்கொண்டனா். கடல் கொந்தளிப்பின் போது அங்கு மேய்ந்த மாடு ஒன்று கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு, உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது.

கடல் கொந்தளிப்பு காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மீனவா்கள் அச்சத்தில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

மெய்க்கண்ணுடையாள்அம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் நோ்த்திக்கடன்

இளைஞா் மீது தாக்குதல் 3 போ் மீது வழக்கு

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT