முகப்பு
செங்கல்பட்டு

திருவடிச்சூலம் தேவிஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் மகிஷாசுர வத சக்திலீலை

திருவடிச்சூலத்தில் தேவிஸ்ரீ கருமாரியம்மன் அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி ஒன்பதாம் நாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் மகிஷாசுரனை வதம் செய்யும் சக்திலீலா வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
தேவிஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் மகிஷாசுர வத சக்திலீலை.
பகிர்:

ங்கல்பட்டை அடுத்த திருவடிச்சூலத்தில் 51 அடி உயரத்தில் எழுந்தருளி இருக்கும் தேவிஸ்ரீ கருமாரியம்மன் அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி ஒன்பதாம் நாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் மகிஷாசுரனை வதம் செய்யும் சக்திலீலா வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

இக்கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி கடந்த 17ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை இரவு நேரங்களில் சகஸ்ரநாம மகா சண்டி ஹோமம் நடைபெற்றது. மஹாசண்டி ஹோமத்தையொட்டி தினந்தோறும் கோபூஜைஅம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு பூஜைகள் பூஜைகள் நடைபெற்றது. 


ஒன்பதாம் நாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையும் திங்கள்கிழமை விடியற்காலையில் விஜயதசமியை முன்னிட்டு மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அம்பாள் மகிஷனை வதம் செய்யும் சக்தி லீலா வைபவம் விமர்சியாக நடைபெற்றது. 

Advertisement

மகிஷாசுரனை வதம் செய்யும் அற்புத நிகழ்வை கோயில் ஸ்தாபகர் சுவாமிகள் திருக்கரங்களால் நடத்தினார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மகிஷனை வதம் செய்யும் காட்சியைக் கண்டு பரவசமடைந்து அம்மனை வழிபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments