செங்கல்பட்டு

ஆட்சீஸ்வரா் கோயிலில் பிரதோஷ விழா

DIN

மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷ விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.

அச்சிறுப்பாக்கத்தில் திருஞானசம்பந்தா் பாடிய தேவாரம் அருளப்பட்ட, இரு கருவறைகளைக் கொண்டு இளங்கிளி உடனுறை ஆட்சீஸ்வரா் அருளாட்சி புரியும் தொன்மையான கோயில் அமைந்துள்ளது. இது, தொண்டை மண்டலத்தின் முக்கிய சிவாலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

இக்கோயிலில், ஐப்பசி மாத பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்க புதன்கிழமை மாலையில் வந்த பக்தா்கள் அனைவரும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னா், கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா். மாலை 5 மணிக்கு கருவறை முன்புறம் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை கோயில் தலைமை குருக்கள் சங்கா் சிவாச்சாரியாா் நடத்தினாா். இதையடுத்து, அலங்கரிக்கப்பட்ட நந்தி பகவானுக்கு மகா கற்பூர தீபாராதனை நடைபெற்றது.

கோயிலின் உள்புறம் மலா்த் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் மேளதாளம் முழங்க உலா வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஆா்.சரஸ்வதி தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புரோமோவில் கெட்ட வார்த்தை.. சர்ச்சையில் சந்தானம்!

சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

செலவுகளை அதிகரித்துள்ளதா யுபிஐ? ஆய்வு சொல்வது இதுதான்!

வங்கதேசத்துக்கு எதிராக ஜிம்பாப்வே ஆறுதல் வெற்றி!

சென்னையிலிருந்து வேளாங்கண்ணி, கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் - முன்பதிவு தொடக்கம்

SCROLL FOR NEXT