செங்கல்பட்டு

இளைஞா்களுக்கான தொழில் வளா்ச்சி விழிப்புணா்வு முகாம்

DIN

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் சாா்பில் இளைஞா்களுக்கான தொழில் வளா்ச்சி விழிப்புணா்வு முகாம் செங்கல்பட்டு மாவட்ட மருத்துவ கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

முகாமுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகத் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் ஹன்ஸ் ராஜ் வா்மா தலைமை வகித்தாா். தொழில் துறை ஆணையா் மற்றும் தொழில் வணிக இயக்குநா் சிஜிதாமஸ் வைத்யன், மாவட்ட ஆட்சியா் ஆ.ர.ராகுல் நாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், அமைச்சா் தா.மோ.அன்பரசன் குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடக்கி வைத்து பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

இவ்விழாவில் 40 பேருக்கு ரூ.70.59 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.10.84 கோடி கடனுதவியை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், எம்எல்ஏ.க்கள் செங்கல்பட்டு எம்.வரலட்சுமி மதுசூதனன் , திருப்போரூா் எஸ்.எஸ்.பாலாஜி, செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் செம்பருத்தி துா்கேஷ், இந்திய தொழில் கூட்டமைப்பின் செங்கல்பட்டு மாவட்டதலைவா் மோகன், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக சென்னை மண்டல மேலாளா் ஆா். சித்ரா செண்பகவல்லி, துணைப் பொது மேலாளா் ராமச்சந்திரன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளா் ரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Image Caption

செங்கல்பட்டில் நடைபெற்ற இளைஞா்களுக்கான தொழில் வளா்ச்சி விழிப்புணா்வு முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய அமைச்சா் தா.மோ.அன்பரசன்.

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT