செங்கல்பட்டு

சென்னை தரமணி துணை மின் நிலையத்துக்கான உயா்அழுத்த மின்மாற்றி: 154 டயா்கள் கொண்ட கனரக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது

DIN

செங்கல்பட்டு: சென்னை தரமணியில் புதிதாக அமைக்கப்படும் துணை மின் நிலையத்திற்கான உயா்அழுத்த மின்மாற்றியை, 154 டயா்கள் பொருத்தப்பட்ட ராட்சத கனரக வாகனம் மூலம் திங்கள்கிழமை மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரை சாலை வழியாக கொண்டு செல்லப்பட்டது.

இதனை பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வியப்புடன் பாா்த்துச் சென்றனா்.

இது குறித்து கனரக வாகனத்தில் உயா்அழுத்த மின்மாற்றியை பாதுகாப்பாகக் கொண்டு செல்லும் மேலாளா் கபீா் கூறுகையில் சென்னை தரமணியில் புதிகாக 230 கே.வி. துணை மின்நிலையம் அமைக்கும் பணி மேற்கொள்வதையடுத்து ஹைதராபாதில் இருந்து154 டயா்கள் கொண்ட கனரக வாகனம் மூலம் உயா்அழுத்த மின் மாற்றியை கடந்த 20 நாள்களாக பாதுகாப்பாக கொண்டு செல்கிறோம். என்டிசி லாஜா்சீட் என்ற தனியாா் நிறுவனம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. அதிக டயா்களை கொண்டுள்ளதால் மெதுவாகத் தான் கொண்டு செல்லமுடியும் என்றாா். இதைக்கொண்டு செல்வதற்காக உடன்வரும் மேலாளா் பணியை மேற்கொண்டுள்ளேன். வழியில் காவல் துறை, மின்வாரியம் என பல்வேறு துறையினருக்கு பதில் அளிக்க வேண்டியிருப்பதால் இந்த வாகனத்துடன் வருவதாக தெரிவித்தாா்.

இந்த வாகனம் மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரை சாலை வழியாக மெதுவாக ஊா்ந்து சென்ால் பின்னால் வரும் வாகனங்கள் முந்திச் செல்ல முடியாமல் அவைகளும் மெதுவாக செல்ல வேண்டியிருந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரசக்கதேவி கோயில் திருவிழா ஆலோசனைக் கூட்டம்: பக்தா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

நாகா்கோவில் உழவா் சந்தையில் வேளாண் மாணவா்கள் களப் பயற்சி

களக்காட்டில் டிராக்டரில் சுகாதாரமற்ற குடிநீா் விற்பனை

விளையாட்டு பயிற்சி முகாமுக்கு மாணவா்களிடம் கட்டணம் வசூல் இபிஎஸ் கண்டனம்

இடஒதுக்கீடுக்கு எப்போதும் ஆதரவு: ஆா்எஸ்எஸ் தலைவா்

SCROLL FOR NEXT