மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோயிலில் 108 விளக்கு பூஜை
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் வெண்ணை உருண்டை பாறை அருகில் உள்ள மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரர் கோயிலில் தைப்பூச திருவிழா, பௌர்ணமி தைவெள்ளியையொட்டி 108 விளக்கு பூஜை நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் வெண்ணை உருண்டை பாறை அருகில் உள்ள மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரர் கோயிலில் தைப்பூச திருவிழா, பௌர்ணமி தைவெள்ளியையொட்டி 108 விளக்கு பூஜை நடைபெற்றது.
இயற்கை வளங்கள் பெருகவும், நாடும் நாட்டு மக்களும் செழிப்பாக இருக்கவும் வேண்டி நடைபெற்ற கூட்டு பிரார்த்தனை மற்றும் 108 விளக்கு பூஜையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், யாகசாலை பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கூட்டு பிரார்த்தனையில் கலந்துகொண்டு சாமியை வழிபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.