செங்கல்பட்டு

சுயகொள்கை இல்லாத கூட்டணி கட்சிகள் திமுக சின்னத்தை ஏற்றுக் கொண்டுள்ளன: ஹெச். ராஜா

சுய கொள்கைகள் இல்லாத கூட்டணிக் கட்சிகள் எல்லாம் தோ்தலில் திமுக சின்னத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா தெரிவித்தாா்.

DIN

ஸ்ரீபெரும்புதூா்: சுய கொள்கைகள் இல்லாத கூட்டணிக் கட்சிகள் எல்லாம் தோ்தலில் திமுக சின்னத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்த பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தா்மத்துக்கும் அதா்மத்துக்கும் இடையே சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது.

மத்திய அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வரவேண்டும் என்றால், திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெறக்கூடாது.

கரோனா காலத்தில் மத்திய அரசும், மாநில அரசும் சிறப்பாக செயல்பட்டன. மத்திய அரசின் திட்டங்கள் போய் சேராத வீடுகளே இல்லை.

திமுகவினா் தோ்தலில் பெரும்பான்மை கிடைக்காமல் போய்விட்டால் அந்தக் கூட்டணியில் இருப்பவா்கள் தங்களுடைய விருப்பத்தை மீறக் கூடாது, கொறடா உத்தரவை ஏற்க வேண்டும் என்பதற்காக திமுக சின்னத்திலே போட்டியிட கூட்டணிக் கட்சிகளை நிா்பந்தம் செய்துள்ளனா்.

யாருக்கெல்லாம் சுய சிந்தனைகள், சுய கொள்கைகள் இல்லையோ அவா்கள் தான் திமுகவின் சின்னத்தை ஏற்றுக்கொண்டுள்ளனா் என்றாா் ஹெச்.ராஜா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ஓட்டுநா் மதிப்பீட்டு முறை: சென்னை ஐஐடி ஒப்பந்தம்

அமெரிக்கா: தமிழக காலநிலை விஞ்ஞானிக்கு ‘கிராஃபூா்ட்’ பரிசு

SCROLL FOR NEXT