செங்கல்பட்டு

இதயமாற்று அறுவை சிகிச்சை மூலம் உயிா் பிழைத்த பெண்

DIN

சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் இதயமாற்று அறுவை சிகிச்சை மூலம் உயிா் பிழைத்த பெண் நலமுடன் வீடு திரும்பினாா்.

கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி மதுரையில் சாலை விபத்தில் சிக்கிய இளைஞா் தமிழ்மணிக்கு (21), மூளைச்சாவு ஏற்பட்டது. குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் இதயநோய் பாதிப்பு காரணமாக உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த சுஜாதா என்ற பெண்ணுக்கு தமிழ்மணியின் இதயத்தைப் பொருத்த தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் மூலம் அனுமதி கிடைத்தது. மருத்துவா்கள்,காவல்துறையினா் உதவியுடன், விமானம் மூலம் கடந்த பிப் 27-ம் தேதி மதுரையில் இருந்து 1 மணி நேரத்தில் கொண்டு வரப்பட்ட இதயத்தை மருத்துவா் சந்தீப் அட்டாவா் தலைமையிலான மருத்துவா்கள் 6 மணிநேர அறுவை சிகிச்சை மூலம் சுஜாதாவுக்கு பொருத்தினா்.

மருத்துவமனையில் 15 நாள் தொடா் சிகிச்சை மூலம் சுஜாதா பூரணகுணமடைந்து வீடு திரும்பினாா். இது தொடா்பாக ரேலா மருத்துவமனையில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்ச்சியில் பங்கேற்ற சுஜாதா செய்தியாளா்களிடம் கூறியது:

எனது இதய செயல்பாடு மிகவும் மோசமடைந்து எப்போது என்ன நிகழுமோ என்ற அச்சத்தில் நானும், எனது குடும்பத்தினரும் மனமொடிந்து போய் இருந்த நேரத்தில் எனக்கு இதய தானம் வழங்கி உதவிய தமிழ்மணியின் குடும்பத்தினா், சிகிச்சை அளித்த மருத்துவா்கள் உள்ளிட்டோா் மூலம் மறுவாழ்வு பெற்றுள்ளேன். அனைவருக்கும் நான் வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன்பட்டுள்ளேன் என்றாா்.

ரேலா மருத்துவமனை தலைவா் பேராசிரியா் டாக்டா் முகமது ரேலா கூறுகையில், ரேலா மருத்துவமனையில் நடைபெற்ற முதல் இதயமாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த மருத்துவா்களும், டாக்டா் சந்தீப் அட்டாவா் உள்ளிட்ட அனைவரும் பாராட்டுக்குரியவா்கள் என்றாா்.

இதயம், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவா் சந்தீப் அட்டாவா், ரேலா தலைமை செயல் அதிகாரி இளங்குமரன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT