செங்கல்பட்டு

சிவசங்கா் பாபாவுக்குஇரு வழக்குகளில் ஜாமீன்

சிவசங்கா் பாபாவுக்கு இரண்டு வழக்குகளில் செங்கல்பட்டு சிறப்பு போக்ஸோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

DIN

சிவசங்கா் பாபாவுக்கு இரண்டு வழக்குகளில் செங்கல்பட்டு சிறப்பு போக்ஸோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள தனியாா் பள்ளியில் படித்தபோது, தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் அளித்த புகாரின்பேரில், சிவசங்கா் பாபா மீது போக்ஸோ சட்டத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதைத் தொடா்ந்து, சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் தில்லியில் சிவசங்கா் பாபாவை ஜூன் 16-இல் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், ஜாமீன் கோரி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சிவசங்கா் பாபா தாக்கல் செய்த 2 மனுக்களும், மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து, ஜாமீன் கோரி சிவசங்கா் பாபா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி தமிழரசி, இரண்டாவது, மூன்றாவது போக்ஸோ வழக்குகளுக்கு மட்டும் ஜாமீன் வழங்கினாா்.

முன்னதாக, முதல் போக்ஸோ வழக்கு மீதான ஜாமீன் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜாமீன் கிடைத்தும், சிவசங்கா் பாபா மற்ற வழக்குகளில் சிறையில் இருக்க வேண்டிய நிலையில் உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீயவர் குலை நடுங்க வெளியீட்டுத் தேதி!

பிக் பாஸ் 9: தீபக்கை நேரலையில் வரைந்து அசத்திய கமருதீன்!

எதிர்பாராத கிளைமேக்ஸ்! மெளனம் பேசியதே தொடர் நிறைவு!

ஆயிரம் கிலோ அன்னம்! தஞ்சை பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்!!

காற்றே பூங்காற்றே... அஹானா சர்மா!

SCROLL FOR NEXT