கொலை நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டு 
செங்கல்பட்டு

அடுத்தடுத்து இரண்டு கொலைகள்: செங்கல்பட்டில் பரபரப்பு

செங்கல்பட்டு நகரில் வியாழக்கிழமை அடுத்தடுத்து இருவேறு இடங்களில் இரட்டைக்கொலை சம்பவம் நடந்ததால் செங்கல்பட்டு நகரமே பெரும் பரபரப்பிலும் அச்சத்திலும் மூழ்கி உள்ளது.

DIN

செங்கல்பட்டு நகரில் வியாழக்கிழமை அடுத்தடுத்து இருவேறு இடங்களில் இரட்டைக்கொலை சம்பவம் நடந்ததால் செங்கல்பட்டு நகரமே பெரும் பரபரப்பிலும் அச்சத்திலும் மூழ்கி உள்ளது.

செங்கல்பட்டு கே. கே.தெரு பகுதியின் அதிமுகவைச் சேர்ந்த காய்கறி வியாபாரி மேகநாஜ் என்பவரின் மகன் கார்த்திக் என்ற அப்பு கார்த்திக் (29). இவர் வியாழக்கிழமை டீக்கடைக்கு  டீ குடிக்க வந்துள்ளார். அப்போது கார்த்தியை பின்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் கார்த்திக் மீது நாட்டு வெடிகுண்டு வீசி, கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர். இதனால் சம்பவ இடத்திலேயே அப்பு கார்த்தி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தப்பியோடிய அதே கும்பல் செங்கல்பட்டு மேட்டுத்தெரு பகுதியில் காய்கறி வியாபாரி சீனுவாசன் என்பவரது மகன் மகேஷ் ( 22) என்பவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்தது.

தகவலறிந்து வந்த நகர காவல் ஆய்வாளர் வடிவேல் முருகன், உதவி ஆய்வாளர்கள் டில்லிபாபு, செல்வராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு நகர காவலர்கள் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய மர்ம கும்பல் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை நடந்த சம்பவங்களை செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தன், ஏஎஸ்பி ஆதர்ஷ் பட்சேரா நேரில் சென்று அப்பகுதிகளில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட இடங்களில் ஐந்து நாட்டு வெடிகுண்டுகளை காவல்துறையினர் கண்டறிந்து கைப்பற்றினர்.

ஒரே சமயத்தில் இரட்டை கொலை நடந்த சம்பவத்தால் செங்கல்பட்டு நகரமே பரபரப்புடன் காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பன்மடங்கு உயர்ந்துள்ள விமான டிக்கெட் விலை

உறக்கத்தைத் தொலைத்த பயணம்... ரோஸ் சர்தானா!

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் ஷஃபாலி வர்மா!

காரம்... ஆயிஷா!

புதினுக்கு பகவத் கீதை அன்பளிப்பு! பிரதமர் மோடி சநாதன தர்மத்தின் தூதர்: கங்கனா ரணாவத் பேச்சு!

SCROLL FOR NEXT