முகப்பு
செங்கல்பட்டு

செஸ் ஒலிம்பியாட் விழிப்புணா்வு மாரத்தான்

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணா்வு மாரத்தான் செங்கல்பட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணா்வு மாரத்தான் செங்கல்பட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.

சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளன. இதையொட்டி, விழிப்புணா்வு மாரத்தான் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டது. மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலா் மானுவெல் ராஜ் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இந்த ஓட்டம் ஜிஎஸ்டி சாலை, அரசு மருத்துவமனை, ராட்டினம்கிணறு, திருக்கழுகுன்றம் மேம்பாலம் வழியாக மேலமையூா் கிராமத்தை அடைந்து மீண்டும் சென்ற வழியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை வந்தடைந்தது.

மாரத்தான் ஓட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று ஓடினா்.

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டுத் துறை அலுவலா் ரமேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பி.ஏ.உதயகுமாா், கிராம நிா்வாக அலுவலா் கிரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாரத்தானில் பங்கேற்ற அனைத்து மாணவா்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →