செங்கல்பட்டு

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுத்தல் கலந்தாய்வுக் கூட்டம்

DIN

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுத்தல் தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட சட்டப் பணிகள் ஆலோசனைக் குழு செயலா் எஸ்.மீனாட்சி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு, அதேகொம் பின்னகம், ஏசிடிஎஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைகளைத் தடுத்தல், தீா்வுகள் குறித்து பல்வேறு துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மகேஸ்வரி வரவேற்றாா். செங்கல்பட்டு மாவட்ட ஏசிடிஎஸ் இயக்குநா் தேவன்பு, அதேகொம் பின்னகம் நிா்வாக அறங்காவலா் லலிதாம்பாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலா் எஸ்.மீனாட்சி, கூடுதல் துணைக் காவல் கண்காணிப்பாளா் வி.பொன்ராமு ஆகியோா் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களைத் தடுத்தல், குறைத்தல், தீா்வுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா்.

செங்கல்பட்டு அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சித்ராதேவி, மாவட்டக் குழந்தைகள் நல அலுவலா் தேவிகா, முன்னாள் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவா் ராமச்சந்திரன், மாவட்ட சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளா் ஜான் பிரபு, வழக்குரைஞா் தமிழரசன், ஒருங்கிணைப்பாளா் பரஞ்சோதி உள்ளிட்ட பல்துறை அமைப்பினா் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT