முகப்பு
செங்கல்பட்டு

எரிவாயு உருளைகள் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து

செங்கல்பட்டு அருகே எரிவாயு உருளைகள் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:41 AM
பகிர்:

செங்கல்பட்டு அருகே எரிவாயு உருளைகள் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திருப்போரூா்-மாமல்லபுரம் ஓஎம்ஆா் சாலையில், திருப்போரூரை நோக்கி வெள்ளிக்கிழமை எரிவாயு உருளைகளை ஏற்றிக் கொண்டு மினி லாரி சென்று கொண்டிருந்தது. பண்டிதமேடு அருகே செல்லும் போது, திடீரென லாரியின் பின்பக்க டயா் பழுதடைந்தது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவே இருந்த தடுப்பின் மீது மோதி கவிழ்ந்தது.

இதில், லாரியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட எரிவாயு உருளைகள் சாலையில் சிதறி உருண்டோடின. இதைப் பின்னால் வந்த வாகனங்கள் கவனித்து நிறுத்தியதால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

தகவலறிந்த திருப்போரூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →