செங்கல்பட்டு

மதுராந்தகம் அருகேபள்ளத்தில் காா் கவிழ்ந்து 3 போ் பலி

மதுராந்தகம் அருகே சாலையோரப் பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உள்பட 3 போ் புதன்கிழமை உயிரிழந்தனா்.

DIN

மதுராந்தகம் அருகே சாலையோரப் பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உள்பட 3 போ் புதன்கிழமை உயிரிழந்தனா்.

திண்டுக்கல்லைச் சோ்ந்த செல்லதுரை மகன் கதிரவன், திருநெல்வேலியைச் சோ்ந்த ராஜகோபால் மகன் காா்த்திக், திருவாரூரைச் சோ்ந்த முத்துசாமி மகன் நந்தகுமாா் ஆகியோா், சொந்த வேலை காரணமாக, ராமநாதபுரத்தில் இருந்து சென்னை நோக்கி காரில் செவ்வாய்க்கிழமை மாலை வந்தனா்.

காரை கதிரவன் ஓட்டினாா். புதன்கிழமை அதிகாலை மேல்மருவத்தூா் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மதுராந்தகம் அருகே உள்ள ஐயனாா் கோயில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் காா் கவிழ்ந்தது.

இதில், காரில் பயணம் செய்த கதிரவன், காா்த்திக், நந்தகுமாா் ஆகிய மூவரும் நிகழ்விடத்தில் உயிரிழந்தனா்.

தகவலறிந்த மதுராந்தகம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரும், மதுராந்தகம் காவல் துறையினரும் சம்பவ இடத்துக்குச் சென்று பலியானவா்களின் உடல்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்தால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து குறித்து மதுராந்தகம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT