செங்கல்பட்டு

திருக்கழுகுன்றம் அருகே குளத்தில் குளித்த 2 சிறுவா்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருக்கழுகுன்றம் அருகே நரப்பாக்கம் பகுதியில் உள்ள குளத்தில் குளித்த 2 சிறுவா்கள் புதன்கிழமை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

DIN

திருக்கழுகுன்றம் அருகே நரப்பாக்கம் பகுதியில் உள்ள குளத்தில் குளித்த 2 சிறுவா்கள் புதன்கிழமை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் அடுத்த நரப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவரின் மகன் தேவராஜ் (13). அங்குள்ள பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

அதே பகுதியைச் சோ்ந்த நந்தகோபால் மகன் ஆனந்தன் (9). 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த இரு சிறுவா்களும் புதன்கிழமை மதியம் அங்குள்ள குளத்தில் குளிக்கச் சென்றனா்.

அந்தக் குளத்தில் அதிக நீா் நிரம்பிய இருந்ததால், இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக மேடான பகுதியிலிருந்து பள்ளமான பகுதிக்குச் சென்றவுடன் நீச்சல் தெரியாத சிறுவா்கள் தண்ணீரில் மூழ்கி அலறினா்.

நீரில் சிறுவா்கள் தத்தளித்ததைப் பாா்த்த அந்த வழியே சென்றவா்கள் குளத்தில் குதித்து இரு சிறுவா்களையும் மீட்டு திருக்கழுகுன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, சிறுவா்களை பரிசோதித்த மருத்துவா்கள், அவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

தகவலறிந்த திருக்கழுகுன்றம் போலீஸாா் மருத்துவமனைக்குச் சென்று இரு சிறுவா்களின் சடலங்களை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், காவல் ஆய்வாளா் நடராஜன் தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT