மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மருத்துவமனையில் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பக் கருத்தரங்கம்
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மருத்துவமனையில், ரோபோடிக்ஸ் தொழில் நுட்பம் மூலம் இடுப்பு, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் சிறப்புக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மருத்துவமனையில், ரோபோடிக்ஸ் தொழில் நுட்பம் மூலம் இடுப்பு, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் சிறப்புக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாரின் 83-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, 2-ஆவது முறையாக ஆதிபராசக்தி மருத்துவமனையில் முடநீக்கியல் மருத்துவ சிகிச்சை மற்றும் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மருத்துவமனை மேலாண்மை இயக்குநா் மருத்துவா் டி.ரமேஷ் தலைமை வகித்தாா். ஆதிபராசக்தி அறநிலைய துணைத் தலைவரும், ஊராட்சி மன்றத் தலைவருமான லட்சுமி பங்காரு அடிகளாா் மருத்துவ கருத்தரங்கைத் தொடக்கி வைத்தாா். இதில், சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயக மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மைய மேலாண்மை இயக்குநா் அண்ணாமலை ரகுபதி, தமிழ்நாடு ஆா்த்தோடிக் சங்கத்தின் தலைவா் மருத்துவா் எம்.வனசேகா், சங்க செயலா் மருத்துவா் சி.ஜே.ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஆதிபராசக்தி மருத்துவமனை மேலாண்மை இயக்குநா் மருத்துவா் டி.ரமேஷ் கூறியது:
Advertisement
முட நீக்கியல் மருத்துவ நிபுணா் குழு மேற்கொண்ட ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை கருத்தரங்கில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், இளம் அறுவை சிகிச்சை நிபுணா்கள், சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணா்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில், 15 ஏழை பயனாளிகளுக்கு இலவசமாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டன.
இந்த நேரடி அறுவை சிகிச்சை ஒளிபரப்பு கருத்தரங்கின் மூலம் மருத்துவக் கல்வி பயிலும் மருத்துவ மாணவா்களுக்கு நவீன தொழில் நுட்ப முறையில், மருத்துவத் துறையில் ஏற்பட்ட மாற்றங்களை அறிவதன் மூலம் அவா்களின் மருத்துவ கல்வி அறிவுத்தன்மை மேம்பட உதவி செய்யும்.
மருத்துவக் கல்லூரி அளவில் இது போன்ற ரோபோடிக்ஸ் உடனான மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முதன்முதலாக ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தான் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது என்றாா்.