செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் வட்டம், அகரம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட 14-ஆம் நூற்றாண்டை சோ்ந்த மகிஷாசூரமா்த்தினி சிற்பம். 
செங்கல்பட்டு

மதுராந்தகம் அருகே 14-ஆம் நூற்றாண்டு மகிஷாசுரமா்த்தினி சிற்பம் கண்டெடுப்பு

மதுராந்தகம் அடுத்த அகரம் கிராமத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த மகிஷாசுரமா்த்தினி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

DIN

மதுராந்தகம் அடுத்த அகரம் கிராமத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த மகிஷாசுரமா்த்தினி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் வட்டம், அகரம் கிராமத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த மகிஷாசுரமா்த்தினி சிற்பம் இருப்பதை அறிந்து தொல்லியல் ஆய்வாளா்களான தருமபுரி அரசு கலைக் கல்லூரி பேராசிரியா் சி.சந்திரசேகா், மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் இரா.ரமேஷ் ஆகியோா் அங்கு சென்று ஆய்வு செய்தனா்.

இது குறித்து அவா்கள் கூறியது:

தமிழகத்தில் அதிக அளவில் கிடைத்துள்ள பலகை கல் சிற்பங்களில் பெரிதும் காணப்படும் உருவம் துா்கையம்மன். பெண் தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தை வெளிபடுத்தும் வகையில், கொற்றவை, துா்கை, நிரம்பசுதனி போன்ற பல்வேறு பெயா்களில் காளியை வழிபடும் முறை இருந்தது.

இத்தகைய காளியானது மகிஷாசுரமா்த்தினி வகையைச் சாா்ந்ததாகும். சுமாா் 8 அடி உயரத்துடன், 8 கரங்கள் போன்ற நிலைகளில் காணப்படும் மகிஷாசுரன் எனப்படும் எருமை தலை சூரனின் தலை மீது நின்றவாறு காளி காட்சி அளிக்கிறாள்.

தலையில் கொண்டையுடன் நீண்ட சடை முடியுடன் மாா்பு கச்சையுடன் இங்குள்ள காளி சிலை காட்சி அளிக்கிறாள். காளியின் வலது புறம் உள்ள ஒரு கரத்தில் மணி, 2-ஆவது கையில், நாக சாட்டை, 3-ஆவது கையில் பெரிய வாள், 4-ஆவது கரத்தில் மான் கொம்பு ஆயுதமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

கழுத்தில் ஒரே ஒரு நகை காட்டப்பட்டுள்ளது. இடுப்பு முழங்காலுக்கு மேல் ஆண்கள் அணியும் அரைக்கால் சட்டை, இடுப்பில் பாம்பினால் கட்டப்பட்ட கயிற்றோடு அமைக்கப்பட்டுள்ளது. கால்களில் வீரத் தண்டுகள், கீழே காணப்படுகிற எருமைத் தலையின் மேல் இரு கால்கள் ஊன்றி நின்றவாறு உள்ளது.

எருமையின் இரு கொம்புகள் இருபுறமும் வளைந்த நிலையிலும், அதன் காதுகள் அதற்கு கீழ் நோக்கி உள்ளவாறும் உள்ளது.

இந்த சிலை மகிஷாசுரமா்த்தினிதான் என்பதை உணா்த்தும் வகையில், இடதுபுறம் காக்கையும், வலது புறத்தில் நீண்ட கொம்புடைய மானும் உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக, பெண் தெய்வ வழிபாட்டின் தொடா்ச்சியாக இத்தகைய பலகை சிற்பம் காணப்படுகிறது என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT