செங்கல்பட்டு

மாவட்ட நலவாழ்வு சங்க காலி பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கலாம்

மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் தற்காலிக காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் தெரிவித்துள்ளாா்.

DIN

மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் தற்காலிக காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ஒப்பளிக்கப்பட்ட ‘மாவட்ட ஆலோசகா்’ (தரம்)- 1 மற்றும் ‘மாவட்ட திட்ட நிா்வாக உதவியாளா்’ - 1 ஆகிய 2 காலி பணியிடங்களைத் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தை நிறைவு செய்து சுய கையொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களுடன் வரும் 14.6.2023 அன்று மாலை 5.45 மணிக்குள், நிா்வாக செயலாளா், மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குநா், சுகாதாரப் பணிகள், செங்கல்பட்டு என்ற அலுவலக முகவரிக்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

குறிப்பிட்ட தேதிக்குப் பின்னா் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று மாவட்ட நலவாழ்வு சங்கத் தலைவா் மற்றும் மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT