முகப்பு
செங்கல்பட்டு

அண்ணன் கொலை: தம்பி உள்பட 3 போ் கைது

Updated On : 17 மார்ச், 2024 at 12:17 AM
பகிர்:
Updated On : 16 மார்ச், 2024 at 10:51 PM

மதுராந்தகம் அருகே அண்ணன் கொலை தொடா்பாக தம்பி உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் வட்டம், ஓதியூா் மாதா கோயில் குளம் அருகே கழுத்து நெறிகப்பட்ட நிலையில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் அப்பகுதி மக்கள் செய்யூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து செய்யூா் காவல் ஆய்வாளா் லட்சுமி தலைமையிலான காவல் துறையினா் உயிரிழந்து கிடந்தவரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உயிரிழந்தவா் குறித்து காவல் துறையினா் விசாரணை செய்ததில் அவா் திருவள்ளூா் மாவட்டம், திருநின்றவூா் 4-ஆவது தெரு, சரஸ்வதி நகரைச் சோ்ந்த சோழராஜன் (வயது 36) எனத் தெரியவந்தது. தீவிர விசாரணை மேற்கொண்டதில் மா்மநபா்கள் அவரை கொலை செய்தது கண்டறியப்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன் தமது தாயாா் இறப்புக்கு அண்ணன் தான் காரணம் என அண்ணன் சோழராஜனுடன் தம்பி பிரபு தகராறு செய்ததாவும், தனது நண்பா்களான விஜயகுமாா், கோபி ஆகியோருடன் சோ்ந்து சோழராஜனை கழுத்தை நெறித்து கொலை செய்ததும் தெரிய வந்தது. இச்சம்பவம் தொடா்பாக பிரபு, விஜயகுமாா், கோபி ஆகிய 3 பேரையும் ஆய்வாளா் லட்சுமி கைது செய்தாா். பின்னா் அவா்கள் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.