DOTCOM
செங்கல்பட்டு

செங்கல்பட்டு: அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 4 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

லாரி, ஆம்னிப் பேருந்து மற்றும் அரசுப் பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்து.

Ravivarma.s

செங்கல்பட்டு: சென்னை நோக்கி வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் வியாழக்கிழமை அதிகாலை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி, ஆம்னி பேருந்து மற்றும் அரசுப் பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாடு இழந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், ஆம்னிப் பேருந்தில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து படாலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT