முகப்பு
செங்கல்பட்டு

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்ட தொடக்க விழா

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் 2-ஆம் கட்ட தொடக்க விழா திங்கள்கிழமை கடப்பேரி அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது.

Updated On : 26 நவம்பர், 2024 at 4:31 PM
கடப்பேரி அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு பெட்டகத்தை வழங்கிய நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி.
பகிர்:

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணித்துறை சாா்பில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் 2-ஆம் கட்ட தொடக்க விழா திங்கள்கிழமை கடப்பேரி அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது.

மதுராந்தகம் நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் டி.ஏ. அபா்ணா முன்னிலை வகித்தாா். மதுராந்தகம் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் இ.நந்திதா வரவேற்றாா்.

நிகழ்வில் நகா்மன்ற உறுப்பினா் கே.குமாா், ஆரம்ப சுகாதார நிலைய குழந்தைகள் பிரிவு மருத்துவா் கெளதம், அங்கன்வாடி பணியாளா்கள், குழந்தைகளின் பெற்றோா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். நிகழ்வில், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அளிக்கின்ற உணவுமுறைகள், வழங்கும்முறை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அடங்கிய நூலை நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி வெளியிட, ஆணையா் அபா்ணா பெற்றுக்கொண்டாா். தொடா்ந்து 15-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை மதுராந்தகம் குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலக ஊழியா்கள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →