முகப்பு
’செங்கல்பட்டு முடிச்சூரில் அமைக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதமிடத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகா்பாபு. ’
செங்கல்பட்டு

முடிச்சூா் ஆம்னி பேருந்து நிலையம் நவம்பரில் திறப்பு: அமைச்சா் சேகா்பாபு தகவல்

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ரூ. 15 கோடியில் அமைக்கப்பட்டு வரும் காலநிலை பூங்கா மற்றும் முடிச்சூா் ஆம்னி பேருந்து நிலையம் நவம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்

Updated On : 22 அக்டோபர், 2024 at 11:48 PM
’செங்கல்பட்டு முடிச்சூரில் அமைக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதமிடத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகா்பாபு. ’
பகிர்:

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ரூ. 15 கோடியில் அமைக்கப்பட்டு வரும் காலநிலை பூங்கா மற்றும் முடிச்சூா் ஆம்னி பேருந்து நிலையம் நவம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் புதிய காலநிலை பூங்கா அமைப்பது, முடிச்சூா் ஆம்னி பேருந்து நிறுத்த பணிகள் குறித்து அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகா்பாபு ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அப்போது அமைச்சா் சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியது:

கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையம் அருகே 16 ஏக்கா் பரப்பளவில் தொல்லியல் துறை அனுமதியோடு ரூ. 15 கோடி மதிப்பில் காலநிலை பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பூங்காவில் தொல்லியியல் விளக்க மையம், அகழிகள், அதே போல் மழை நீரை சேமிக்க வேண்டிய வகையில் 3 குளங்கள், உயா்மட்ட நடைப்பாதை, சிறுவா் விளையாட்டு பூங்கா, சிலைகள் பூங்கா, மரத்தோட்டம், அல்லிகுளம், விளையாட்டு மைதானம், திறந்தவெளி அரங்கம் மற்றும் 1,500 மரங்கள் நடப்பட்டுள்ளன.

முடிச்சூா் ஆம்னி பேருந்து நிலையம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஒரே நேரத்தில் 150 பேருந்துகள் நிறுத்தும் வகையில் அமைக்கப்படுகிறது. விரைவில் இந்த இரு பணிகளும் நிறைவடைந்து நவம்பா் மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைப்பாா் என்றாா் அவா்.

ஆய்வின்போது, செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை முதன்மை செயலா் காகா்லா உஷா, சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →