முகப்பு
செங்கல்பட்டு

உதவும் கரங்கள் திட்ட தொடக்க விழா

மதுராந்தகம் அடுத்த கருங்குழி மேலவளம்பேட்டை நகரில் செயல்பட்டு வரும் உதவும் கரங்கள் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு

உதவும் கரங்கள் திட்ட தொடக்க விழா

மதுராந்தகம் அடுத்த கருங்குழி மேலவளம்பேட்டை நகரில் செயல்பட்டு வரும் உதவும் கரங்கள் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 12:30 AM
பகிர்:

மதுராந்தகம் அடுத்த கருங்குழி மேலவளம்பேட்டை நகரில் செயல்பட்டு வரும் உதவும் கரங்கள் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

உதவும்கரங்கள் தொண்டு நிறுவனத்தின் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் பசித்தால் உணவு எடுத்துக் கொள் திட்டம் மதுராந்தகம் சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நாள்தோறும் 150-க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் சந்நிதி தெருவில் 5-ஆவது கிளையாக துவக்கப்பட்ட பசித்தால் உணவு எடுத்துக் கொள் திட்டத்தை சமூக ஆா்வலா் காளத்தி கடந்த ஆண்டு தொடங்கி வைத்தாா். அதன் 2-ஆம் ஆண்டு விழாவுக்கு உதவும் கரங்கள் திட்ட நிறுவனா் ஆா்.சரவணன் தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா் காளத்தி வரவேற்றாா்.

நிகழ்வில் தொண்டு நிறுவன நிா்வாகிகள் டி.ஜான் பாட்ஷா, பி.மணிகண்டன், ஜிபி.ஹரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →