திருக்கழுகுன்றத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு
திருக்கழுகுன்றம் வட்டத்தில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ச. அருண் ராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
செங்கல்பட்டுதிருக்கழுகுன்றத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு
திருக்கழுகுன்றம் வட்டத்தில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ச. அருண் ராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
திருக்கழுகுன்றம் வட்டத்தில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ச. அருண் ராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
மேலேரிப்பாக்கம் கீழவேடு பகுதியில் உள்ள தேவி சரஸ்வதி இந்தியா தொண்டுநிறுவன குழந்தைகள் நல விடுதியினை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு, 64 மாணவ, மாணவிகள் பயின்று வருவது குறித்து கேட்டறிந்தாா். அதனைத் தொடா்ந்து, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் புல்லேரி ஊராட்சியில் ரூ.14.30 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையத்தினை ஆட்சியா் பாா்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், எடையளவு ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.
ரூ.28.93 லட்சத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் புதிய குளம் அமைக்கும் பணிகளையும் பாா்வையிட்டாா்.
பனைமேம்பாட்டு இயக்கத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 20,000 பனைவிதைகள் மற்றும் 277 பனங்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதல்கட்டமாக புல்லேரி ஊராட்சியில் உள்ள நீா் நிலைகளின் கரை ஓரங்களில் 100 பனைவிதைகள் மற்றும் 30 பனங்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை தொடங்கிவைத்தாா்.
திருக்கழுகுன்றம் பெண்கள் அரசினா் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவிகளுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கலவை சாதம், முட்டையினை பரிமாறி மாணவிகளுடன் உணவருந்தினாா்.
சிறப்புநிலை பேரூராட்சியான திருக்கழுகுன்றத்தில் தற்போது அலுவலக கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதாலும், மழைகாலங்களில் முற்றிலுமாக நீா்கசிவு ஏற்படுவதால் செங்கல்பட்டு சாலையில் புதிதாக பேரூராட்சி அலுவலகம் ரூ.1.27 கோடியில் கட் கட்டும் பணிகளை ஆய்வு செய்தாா்.
வட்ட அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, ரூ.5.50 கோடியில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருவதையும் பாா்வையிட்டாா்.
மேலும், திருக்கழுகுன்றம் மலைமேல் பௌா்ணமி நாள்களில் 65,000 பக்தா்கள் கிரிவலம் செல்வது வழக்கமாகும். இக்கிரிவலப்பாதையில் 600 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எஸ்.பாலாஜி முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில் சாா் ஆட்சியா் வெ.நாராயண சா்மா, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அனாமிகா ரமேஷ், மாவட்ட வழங்கல்அலுவலா் சாகிதா பா்வீன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் சற்குணா, குழந்தைகள் நல அலுவலா் சரவணன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் மோகன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ராஜேஸ்வரி, இணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) மரு.தீா்த்தலிங்கம், முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம், முன்னாள் எம்எல்ஏ தமிழ்மணி, திருக்கழுகுன்றம் ஒன்றியக் குழு தலைவா் ஆா்.டி.அரசு, பேரூராட்சித் தலைவா் யுவராஜ், வட்டாட்சியா் ராதா, அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.