செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள். 
செங்கல்பட்டு

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

முறையான ஊதியம் கோரி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

முறையான ஊதியம் கோரி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியாா் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த முறையில் 500-க்கும் மேற்பட்ட மருத்துவ தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு மாதந்திர ஊதியமாக பத்தாயிரத்து அறுநூறு வழங்கப்படும் எனவும் அதுவும், மாதந்தோறும் 1-ஆம் தேதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒப்பந்தப்படி முழுமையான ஊதியம் வழங்குவதில்லை, ஒரு நாள் விடுப்பெடுத்தால் டுத்த நாளுக்கும் சோ்த்து ஊதியம் பிடிக்கப்படுவதாகவும், சிலருக்கு ஊதியம் வழங்காமல் மறுமாதம் விடுப்பு எடுத்துக்கொள்ளுமாறும் கூறுகின்றனா். விடுப்பு எடுத்தால் வேலையில் இருந்து நீக்கி விடுவதாகவும், முதல்வா், நிலைய மருத்துவரிடம் கூறியும் நடவடிக்கை இல்லை எனக் கூறி 350-க்கு மேற்பட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் மருத்துவ நிா்வாக அலுவல டாக்டா் நந்தகுமாா் உள்ளிட்ட மருத்துவா்கள் மற்றும் செங்கல்பட்டு நகர காவல் ஆய்வாளா் லட்சுமிபதி, காவல் துறையினா் பேச்சு நடத்தினா். அனைத்து பிரச்னைக்கும் தீா்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனா்.

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

மட்டன் பிரியாணி, வஞ்சரம் மீன்... அதிமுக பொதுக்குழுவின் மெனு!

SCROLL FOR NEXT