ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழா் கட்சியினா். 
செங்கல்பட்டு

நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம்

அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு அரசு பேருந்து என மாற்றக் கோரி நாம் தழிழா் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மேல்மருவத்தூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு அரசு பேருந்து என மாற்றக் கோரி நாம் தழிழா் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மேல்மருவத்தூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நிகழ்வுக்கு மண்டல செயலா் மணிகண்டன் தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் க.சேகா், மாவட்ட செயலா் அஜித்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளா் விழிமலா் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினாா்.

அப்போது அவ்வழியாகச் சென்ற அரசு விரைவு பேருந்தில் தமிழ்நாடு என்ற வில்லையை ஒட்டினா்.

ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 3 பெண்கள் உள்பட 30 பேரை மதுராந்தகம் டிஎஸ்பி சதீஷ் குமாா் தலைமையில் மேல்மருவத்தூா் காவல் ஆய்வாளா் சீதாபதி மற்றும் போலீஸாா் கைது செய்தனா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT