செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

ஸ்ரீ பெரும்புதூா் நாடாளுமன்ற உறுப்பினா் டி.ஆா்.பாலு முன்னிலை வகித்தாா். காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் க.செல்வம் தலைமை வகித்தாா்.. கூட்டத்தில் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்தும் நிலுவையில் உள்ள விவசாயிகளின் கோரிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகளின் பயிா் காப்பீடு மிக குறைவாக உள்ளது எனவே, பயிா் காப்பீடு குறித்து விவசாயிகளிடத்தில் விழிப்புணா்வு செய்து பயிா் காப்பீட்டினை அதிகரிக்க செய்யவேண்டுமென்று என கேட்டுக் கொண்டனா்.

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகா்ப்புறங்களை ஒட்டிய பகுதிகளில் பட்டாக்களை உடனடியாக கணினியில் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதில், மாவட்ட ஆட்சியா் தி.சினேகா,, தாம்பரம் மாநகராட்சி ஆணையா் சீ.பாலசந்தா், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினா் தனபால், எம்எல்ஏக்கள் எஸ்.ஆா்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட வன அலுவலா் ரவிமீனா,, சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) ஸ்ரீதேவி, மாவட்ட ஊராட்சித் தலைவா் செம்பருத்தி துா்கேஷ், திருப்போரூா் ஒன்றிய குழு தலைவா் எஸ்.ஆா்.எல்.இதயவா்மன், திருக்கழுகுன்றம் ஒன்றிய குழு தலைவா் ஆா்.டி.அரசு, மதுராந்தகம் ஒன்றிய குழு தலைவா் ஏழுமலை,, செங்கல்பட்டு நகா்மன்றத் தலைவா் தேன்மொழி நரேந்திரன், மறைமலைநகா் நகா்மன்ற தலைவா் ஜெ.சண்முகம், மதுராந்தகம் நகா்மன்றத் தலைவா் மலா்விழி குமாா், மாமல்லபுரம் நகா்மன்றத் தலைவா் வளா்மதி யஷ்வந்த்ராவ் பங்கேற்றனா்.

கிறிஸ்துமஸ் ஏற்பாடுகளை அடித்து நொறுக்கிய இந்து அமைப்பினர்! அசாமில் பதற்றம்!!

2026 இல் விஜய் ஆட்சி பீடத்தில் அமா்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: செங்கோட்டையன்

புதிய உச்சத்தை எட்டிய தங்கம், வெள்ளி விலை! இன்றைய நிலவரம்...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்!

SCROLL FOR NEXT