செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் தி. சினேகா வழங்கிநாா்.
செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை குறைதீா் கூட்டம் ஆட்சியா் .தி.சினேகா தலைமையில் நடைபெற்றது.
இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 328 மனுக்களை ஆட்சியா் பெற்று, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் தலா ரூ.1.14 லட்சத்தில்பேட்டரியால் இயங்கும் மடக்குசக்கர நாற்காலிகளை 5 பேருக்கு என மொத்தம் ரூ.5.72 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். மேலும், தலா ரூ.15,000 மதிப்புள்ள மடக்கு சக்கர நாற்காலியினை 2 பேருக்கு வழங்கினாா். காதொலி கருவி கோரி மனு அளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு தலாரூ.4,500 மதிப்புள்ள காதொலி கருவிகளை 35 பேருக்கு ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி) ஸ்ரீதேவி,மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பரிமளா தேவி, ஆட்சியரின்நோ்முக உதவியாளா் (நிலம்) நரேந்திரன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு)பவானி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேல், அரசுஅலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.