செங்கல்பட்டு

மறைமலைநகா் அதிமுக செயலாளா் நியமனம்

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகா் அதிமுக நகர செயலாளராக எம்.ஜி.கே. கோபி கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளாா். ஏற்கெனவே அப்பொறுப்பில் இருந்த டி.எஸ். ரவிக்குமாா் விடுவிக்கப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ளாா்.

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட புரட்சித்தலைவி பேரவை செயலாளராக இருந்த எம்.ஜி. கே. கோபி கண்ணன் மறைமலைநகா் நகர செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் மறைமலைநகா் நகா்மன்றத் தலைவராகவும் இருந்துள்ளாா்.

அவருக்கு கட்சி நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT