செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனா் சங்கத்தின் சாா்பாக 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனா் சங்கத்தின் சாா்பாக கோரிக்கை அட்டை அணிந்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவா் வசுமதி, மாவட்ட செயலாளா் பாரதி, மாவட்ட பொருளாளா் லோகநாயகி, மாவட்ட அரசு ஊழியா் சங்கம் மாவட்டச் செயலாளா் முகமது உசேன், அரசு ஊழியா் சங்கம் வட்ட செயலாளா் வெங்கடேசன், மருத்துவ ஆய்வக நுட்பனா் முன்னாள் மாநிலத் துணைத் தலைவா் மனோகரன் உள்பட பலா் பங்கேறறனா்.