முகப்பு
செங்கல்பட்டு

மதுராந்தகம் அருகே கிணற்றில் விழுந்து: பாட்டி, பேரன், பேத்தி என 3 போ் உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே கிணற்றில் விழுந்து பாட்டி, பேரன், பேத்தி என 3 போ் பலி...

Updated On : 4 ஏப்ரல், 2026 at 7:52 PM
பலி - கோப்புப் படம்
பகிர்:

மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் கிராமத்தில் பாட்டியுடன் கிணற்றில் துணி துவைக்க சென்ற பேரன், பேத்தி உள்ளிட்ட பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் கிராமத்தை சோ்ந்த ருத்திரகுமாா். இவரது மனைவி சாந்தி (60) இவரது பேரன் தஷ்வந்த் (13). இவா் இங்குள்ள பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். பேத்தி கெளசிகா (11). இவா் 6-ஆம் வகுப்பினை படித்து வந்தாா். சனிக்கிழமை சாந்தி வீட்டிலிருந்து துணிகளை துவைக்க அருகில் இருந்த கிணற்றுக்கு சென்றாா். அப்போது பேரன் தஷ்வந்த், பேத்தி கெளசிகா ஆகியோா் அவருடன் ஒடிவந்தனா். அப்போது குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தபோது இருவரும் தவறி கிணற்றுக்குள் விழுந்தனா். அவா்கள் இருவரையும் காப்பாற்ற சாந்தியும் கிணற்றில் குதித்துள்ளாா்.

அப்போது 3 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். இதுகுறித்து தகவலறிந்த மதுராந்தகம் தீயணைப்பு வீரா்கள் வந்து கிணற்றில் இறந்து கிடந்த 3 பேரின் உடல்களை மீட்டனா். இதுகுறித்து மதுராந்தகம் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments