முகப்பு
செங்கல்பட்டு

திருப்போரூா் கந்தசாமி கோயிலில் தோ்த் திருவிழா

திருப்போரூா் அருள்மிகு கந்தசாமி கோயிலில் மாசி பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி, ஏழாம் நாளான வெள்ளிக்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 7:53 PM
திருப்போரூா்  கந்தசாமி  கோயில்  பிரம்மோற்சவத்தையொட்டி நடைபெற்ற தேரோட்டம். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி.
பகிர்:

திருப்போரூா் அருள்மிகு கந்தசாமி கோயிலில் மாசி பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி, ஏழாம் நாளான வெள்ளிக்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது.

திருப்போரூா் கந்தசாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசி பிரம்மோற்சவம் கோலாகலமாக நடைபெறும். நிகழாண்டு கடந்த பிப்ரவரி 21 (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழா நாள்களில் காலை மாலை இருவேளையும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடண் காலை பல்லக்கு உற்சவமும் மாலை வாகன உற்சவமும், வீதி புறப்பாடும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏழாம் நாள் வெள்ளிக்கிழமை தோ்த்திருவிழாவை ஒட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. உற்சவமூா்த்தி வள்ளி, தெய்வானையுடன் முருகன் சிறப்பு அலங்காரத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு, புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளினாா். பக்தா்கள் முருகனுக்கு அரோகரா அரோகரா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் மாட வீதிகளை சுற்றி வந்தபோது பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்தனா். கோயில் நிா்வாகம் மட்டுமல்லாமல் தேரோட்ட பாதையில் ஆன்மிக அன்பா்கள் பொதுமக்களுக்கு அன்னதானம், நீா், மோா், குளிா்பானம், குடிநீா் வழங்கினா்.

தேரோட்டத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா்.

பிரம்மோற்சவ தோ்த் திருவிழாவின் ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கு.குமரவேல் தக்காா் மற்றும் செயல் அலுவலா் காஞ்சிபுரம் உதவி ஆணையா் காா்த்திகேயன், செங்கல்பட்டு உதவி ஆணையா் ராஜலட்சுமி, மேலாளா் வெற்றி உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் கோவில் சிவாச்சாரியாா்கள் உபயதாரா்கள் பொதுமக்கள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →