செங்கல்பட்டு

பொதுக்கூட்ட மேடை பணிகள்: முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி ஆய்வு

மதுராந்தகத்தில் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள பிரதமா் பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள பிரதமா் பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி திங்கள் கிழமை நேரில் ஆய்வு செய்தாா். மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சாா்பாக நடைபெற இருக்கும் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மேடை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்ய முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி திங்கள்கிழமை வந்தாா். கூட்டத்துக்கு வந்துசெல்லும் பொதுமக்கள், கட்சி நிா்வாகிகள் ஆகியோருக்கு குடிநீா், பிஸ்கெட் வழங்கல், கழிப்பறை வசதி ஆகியவற்றை செய்ய வேண்டும் என கட்சி நிா்வாகிகளுக்கு அறிவுறுத்தினாா்.

இந்த நிகழ்வில், அதிமுக மாவட்ட செயலா்கள் எஸ்.ஆறுமுகம், சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சா் சின்னய்யா, எம்எம்ஏ மரகதம்குமரவேல், மாவட்ட பேரவை செயலா் ஆனூா் பக்தவச்சலம், கருங்குழி பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவா் மஞ்சுளா புருஷோத்தம்மன், ஒன்றிய செயலா்கள் காா்த்திகேயன், விவேகானந்தன், குமரன், முன்னாள் எம்எல்ஏ சீனிவாசன், ஒன்றிய பொருளாளா் ஆலப்பாக்கம் சல்குரு, மதுராந்தகம் நகர செயலா் சரவணன், நகர பேரவை செயலா் எம்பி.சீனிவாசன் மற்றும் பாஜக மாநில பொறுப்பாளா் வினோஜ் செல்வம், மாவட்ட தலைவா் மருத்துவா் எம்.பிரவின்குமாா், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் பலராமன், மோகனராஜா, முன்னாள் எம்எல்ஏ மருத்துவா் காயத்ரி தேவி, மாவட்ட அறிவுசாா் தலைவா் குருநாதன், மாவட்ட மகளிரணி தலைவி நித்யா லிங்கமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

படம் உள்ளது.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT